குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
Nadaraja Master

பாலகர்கள் மழைநீரில் நனைந்தபடி மலர்கொத்தை தாங்கி நிற்க,  பாலாலி வீதி எங்கும் எம்மவர்கள் (வேதனையை சுமந்தபடி) அணி நடக்க, எங்கள் ஊரின் காவிய நாயகனுக்கு விடை கொடுத்த வியாழனன்று உலகமே அறிந்தது நாம் யார் என்று. ஊரை விட்டு இடம் பெயர்ந்து எம்மவர்கள் வாழ்ததனால், உரும்பிராய்க்கிராமும் எம்மவரால் பெற்றது பெருமை இன்று.

ஆம், இது வரை எந்தக் குரும்பசிட்டியருக்கும் நடைபெறாத இறுதி அஞ்சலியையும், மரண ஊர்வலத்தையும் தனாதாக்கிக்கொண்ட எங்கள் ஊரின் மைந்தன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள் தனக்கென எடுத்துக் கொண்டது இவ் இரண்டையும் தான்;.

எங்கள் ஊருக்கு உழைத்த உத்தமர்களின் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய மற்றொரு பெரியவராக, காலஞ்சென்ற திருமதி செல்லம்மா கனகசுந்தரம் ஆசிரியை அவர்களைப் பார்க்கிறோம். தன்னலமில்லாத் தனித்தொண்டாற்றியதன்மூலம் தன்னூர்ப் பள்ளிப்பிள்ளைகளை அறிவியற் சிந்தனையாளர்களாக்கிய பெருந்தகை எங்கள் செல்லம்மா ரீச்சர் ஆவார்.

தமிழ்மொழிப்புலமையும் ஆங்கிலமொழிக் கல்வியறிவும் ஒருங்கே சேரப்பெற்றவர் இவர்.01.01.1970 ம் ஆண்டு தொடக்கம் 31.12.1990 ம் ஆண்டு வரையான இருபது வருட காலங்களாக, தனது சொந்த ஊரான குரும்பசிட்டியில் பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியில் ஈடுபட்டவர்

கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடி பேணி... என்று தொடங்கும் தேவாரம் காதில் இன்றும் தேனாகப்பாயக் காரணம் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களின் மனங்களில் பண்ணோடு இசை புகட்டிய ஆசிரியர் மு. இராமலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது.

 வெள்ளை உடையும், நீறு பூத்த நெற்றியும், நிமிர்ந்த நடையும், நெகிழ்வான பேச்சும், தனக்கே உரிய பணிவும் கொண்டு ஆன்மீகத்திற்கு இலக்கணமாகவும் ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாகவும் வாழ்ந்து மூன்று தலைமுறைக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியார் திரு. இராமலிங்கம் அவர்கள் எந்த நிலையிலும் தளராத மனம் கொண்டவர், எந்த செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தவர், எதைச் சொன்னாலும் அர்த்தம் உள்ளதாக பொருள்விளங்க உரைப்பவர்.

எங்கள் குரும்பசிட்டித் தாயானவள் பெற்றெடுத்த சற்புத்திரர்களுள் பேரோடும் புகழோடும் வாழ்ந்த சிறப்புக்குரியவர் முன்னாள் விதானையார், அமரர் கதிரேசு செல்லத்துரை அவர்களாவர். தான் பிறந்த கிராமம் விழிப்புணர்ச்சி பெறவும், சமயப்பற்று– அன்பு– பண்பாடுகளில் சிறப்புற்று விளங்கவும் செய்துகொள்ளவேண்டிய பலவற்றை புத்திசாதுரியத்துடன் செய்து முடித்தவர்.கிராம மக்கள் உடல்-உள-நல விருத்தியுடன் சீர் சிறப்பாக வாழவேண்டுமென்ற உயரிய நோக்கோடும்,இன்னும் கிராமத்தின் எதிர்கால வளர்ச்சியிலும் - அபிவிருத்தியிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்ட பண்பாளர்.

அன்பும் இரக்க சிந்தனையும் அவர் கூடப்பிறந்தவை. சகலரிடமும் சகோதர வாஞ்ஞையுடன் நட்புக்கொண்டு வாழ்ந்தவர்.

Sivasubiramaniyam

நாம்வாழுமிடம் எது என்பதை நினைவில் நிறுத்தும்போது, அங்கெல்லாம் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதே உற்று நோக்கப்படவேண்டிய முக்கியமானதொன்றாகும். இதுவே எம் கிராமத்திற்கு நாம் தேடும் பெருமையும், குரும்பசிட்டி(யர்கள்) என்ற பெயருக்கு நாம் கொடுக்கும் மதிப்புமாகும். இதற்கமையவே எம் மண்ணில் பிறந்தவர் தம்பணி தொடர, எம் மண்ணேடு வந்து இணைந்தவர்களும் தம்மை குரும்பசிட்டியர்களாக மாற்றி எங்கள் கிராமத்திற்கு பெருமை தருகின்றனர்.

ஈழத் தமிழகத்தின் வடபால், வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள குக்கிராமம் குரும்பசிட்டி. இன்று அரச உயர் பாதுகாப்பு வலயத்தனுள் அடங்கி அடக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் இக்கிராமத்தின் அருமை பெருமைகளும் அதன் வீச்சின் பரிமாணமும் சொல்லி அமையத்தக்கதன்று.

தமிழ் இயல், இசை, நாடகம், அரசியல், கைத்தொழில், கமத்தொழில் என எல்லா வகையிலும் துறையிலும் சிறப்போடு செயற்பட்டு வந்த இக்கிராமத்து வளர்ச்சியில் உயர்ச்சியில் அக்கறை காட்டிய, அர்ப்பணிப்போடு செயற்பட்ட பல பெரியார்கள் இருக்கிறார்கள்.

இளையதம்பி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் முது மொழிக்கு அமைய திக்கெல்லாம் பரந்துவாழும் எமது வாழ்க்கை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. 50 வருடங்களின் முன்பே தமிழர் தரணியெங்கும் இடம் பெயர்ந்து தங்கள் திறமைகளைக்காட்ட எங்கள் ஊரில் இருந்தும் புறப்பட்டனர்.

அவ்வழியில் மலேசிய நாட்டில் குடிபெயர்ந்து அந்நாட்டின் புகையிரத இலாகாவில் பணிபுரிந்த பின் தாய்நாடு திரும்பியவர்களில் மாப்பாணர் இளையதம்பி அவர்கள் குரும்பசிட்டி மக்களின் தந்தையாக என்றும் மதிக்கப்பட்டவர். அவர் அதே மரியாதையை அயல் கிராம மக்களிடம் இருந்தும் பெற்ற ஒரு பெருமகன் ஆவர்.

கல்விக்கு எங்கள் கிராம மக்கள் கொடுத்த விலை மிக அளப்பரியது. தமது குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் தம் நேரம் காலம் பொருளாதாரம் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார்கள்.இதற்கு அடையாளமாக எங்கள் மண்ணில் அரசாங்க சேவையில் இருந்தவர்களில் அரைப்பங்குக்கு மேலானவர்கள் ஆசிரியர்களாவர்கள்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர்.

”வீதி திரு வீதியாகக் காட்சியளிக்கிறது,” ”அடியார்கள் திருவீதியை மெழுகிட அழைக்கப்படுகின்றீர்கள்”, ”அம்பாள் மரகத வண்ணமயூரமாக….”.அன்னைபராசக்திக்கு அரோகரா”. இவ் வசன நடைகளை நாம் எமது கிராமத்தில் அம்பிகையின் திருவிழாக்காலத்தில் கேட்டிருக்கின்றோம்.