Print
Category: கிராமப்பெரியார்கள்
Hits: 2600

அதிபர் மு.க.சுப்பிரமணியம அவர்களை இளமையிலேயே எனக்கு நன்கு தெரியும். இந்த ஊரில் மிகப்பிரபல ஆசிரியராகவிருந்த திரு வ.பொன்னுக்குமாரு அவர்களிட கரப்பந்தாட்டம் பயின்று திறமையான கரப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார். அப்போது இவரிடம் தலமைக்கு வேண்டிய பணிவு, கூட்டுறவு உணர்ச்சி, கட்டுப்பாடு, சுத்தம் என்பவை இருப்பதைக்கண்டேன்.

 

இவரிடம் யான் உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் இளமையிலேயே அவர் பயின்று கொண்ட விடாமுயற்ச்சியும், பலரை அணைத்துச்செல்லும் திறமையும், எதிலும் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும், கட்டுப்பாடாக மாணவர் ஒழுகவேண்டும் என்றவற்புறுத்தலும் விழங்கியதைக்கண்டேன். 1946ஆம் ஆண்டில் வயாவிழான் மத்திய மகாவித்தியாலயம் தொடங்கியதும் இப்பாடசாலை ஆரம்ப பாடசாலையாக மாறியது. ஐந்து ஆசிரியர்களே சேவை செய்யக்கூடியதாக இருந்தது. இந்தநிலை இந்த அதிபர் வித்தியாலயப் பொறுப்பேற்றதும் மாறத்தொடங்கியது. நான் இவ்வித்தியாலயத்துக்கு மாற்றலாகி வரும்போது இவரின் முயற்சியால் ஆறாம் ஏழாம் வகுப்புகள் வைக்கப்பட்டு 263 மாணவர்களையும் 9 ஆசிரியர்களையும் கொண்டதாக இவ்வித்தியாலயம் வளரத்தொடங்கியது.

                 நானகணட தலைமை ஆசிரியர்களிற் சிலர் நன்றாக கல்வி கற்ப்பிக்க கூடியவர்கள், சிலர் இருப்பதைவைத்துக்கொண்டே நல்ல நிர்வாகமாக நடைபெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள், இன்னும் சிலர் அரசாங்கம் அனுப்பும் சுற்று நிரூபங்களை, அறிவித்தல்களைக்கூட, அலர்ச்சியப்படுத்துபவர்கள், சிலர் ஒழுங்காக எதையும் வைத்திருப்பதில் திறமையற்றவர்கள். எல்லா அம்சங்களும் பொருந்திய தலமை ஆசிரியர்கள் மிக மிக குறைவு. இந்த அதிபர் வித்தியாலயத்தின் வளர்ச்சியை அவதானித்து "இந்த ஊரில் பிறந்த நான் எனது சேவையின் எறுதிக்காலத்திலே இந்தக்கிராமத்துக்கு இவ்வித்க்தியாலயம் மூலம் ஏதாவதி நன்மை செய்யவேண்டும்"  என்ற துடிப்போடு சேவைசெய்தார் என்பது உணமை. அதனால் பின்னர் 8ஆம் 9ஆம் வகுப்புகள் வைக்கப்பட்டு இன்று மாணவர் தொகை 397 ஆகவும் ஆசிரியர் தொகை 17ஆகவும் உயர்ந்து இருப்பதை நாம் இன்று கண்ணாரக்காண்கின்றோம்.

         சிலர் சனப்பெருக்கத்தினால் இயற்கையாகவே மாணவர்தொகை கூடுவதும் ஆசிரியர்தொகை அதிகமாவதும் உண்டென்று நினைக்கலாம். ஆனால் இவ்வித்தியாலயத்தில் கல்வித்தேர்ச்சி, ஒழுங்கு, ஆசிரியர்களின் முயற்ச்சி, சமய ஆர்வம், நிர்வாகம் இவற்றை அவதானித்து அயல் கிராமங்களிலிருந்தும் மாணவர்களை பெற்றோர் இவ்வித்தியாலயத்துக்கு அனுப்பியதாற்றான் இவ்வளர்ச்சி ஏற்ப்பட்டது. இவ்வித்தியாலயத்தில் படிக்கும் மாணவர்கள் இவற்றை அவதானித்துப் பிறபாடசாலைகளிற் சேர்வதை விட்டு இவ்வித்தியாலயத்தில் தொடர்ந்து படித்துவருவதும் ஒரு காரணமாகும்.

        இவ்வதிபரின் முயற்ச்சி இவ்வளவோடு நிற்கவில்லை. மாணவர்களின் தொகைக்கேற்ப்ப பாடசால் கட்டிடங்களைக் கட்டிமுடிக்கவேண்டுமென்று செயற்ப்படத்தொடங்கினார். கனிஷ்ட வித்தியாலயமாக இருந்தாலும் மகாவித்தியாலயங்களில் மாணவர்களுக்குரிய வசதிகள் போல சாரணர்குளு, குருளைச்சாரணர்குழு, முதலுதவி வகுப்புக்கள், பாடசாலைகூட்டுறவுச்சங்கம் ஆகியவற்றை ஆரம்பித்து மாணவர்களுக்குச் செவைமனப்பாண்மையையும் கூட்டுறாவு உணர்ச்சியையும் உண்டாக்கினார். வட்டாரத்தில் நடைபெறு விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, சங்கீதப்போட்டி, எதுவாக இருந்தாலும் இவ்வித்தியாலய மா?ணவ்ர்களை பங்குபெற்றச்செய்து பாரட்டுக்களைப்பெற்றார். புத்தக்ப்படிப்புடன் இல்லாது மாணவர்கள் நேரிற்க்கண்டு அறிவைப்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம்கொண்டு சுற்றுலாக்களை ஒழுங்குசெய்து அறிவை வகுக்க வளிவகுத்தார்.

                 வயதுக்கும் அறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கைஉடைய இவர் நம்மவரை நாம் மதிக்கும் பழக்கம் வரவேண்டும் எனப் பல இடங்களில் வற்ப்புறுத்துவதுண்டு. வித்தியாலயத்தி நடைபெறும் விஷேச நிகழ்ச்சியின்போது நமது கிராமத்தவர்களுக்கு மதிப்புக்கொடுத்து வந்ததை யான் அறிவேன்.

              இவரது நிர்வாகத்திறாமயை 1974 ஆம் ஆண்டு கார்த்திஉகை மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறந்த பொருட்க்காட்ச்சியின் போது யாவரும் காணக்கூடியதாக இருந்தது. கல்வி அதிகாரிகளும் பொறுப்புணர்ச்சி மிக்க சிறந்த நிர்வாகி என்பதை அற்ந்து வட்டார மெய்வல்லுனர் போட்டி அமைப்பாளராகவும் வட்டாரப்பரீட்ச்சை காரியதரிசியாகவும் நியமித்தனர். ஒன்றாஇ செய்ய வேண்டுமென எண்ணிவிட்டால் எந்தக்கஸ்ரத்தின் மத்தியிலும் அதை செய்ய்துமுடிக்கும் ஆற்றல் இவருக்குண்டு.

              தன்னுடைய வீடு, குடும்பம் முதலியனவற்றைப்பற்றி அதிகம் அக்கறாஇசெலுத்தாது வித்தியாலயத்தைப் பற்றியும் பிறருக்கு உதவி செய்வதைப்பற்றியும் சிந்த்திக்கு சிந்திக்கும் இந்த ஆசிரியருக்கு அவரது குடும்ப பொறுப்புகளை தாங்கக்கூடிய மனைவியாகவும், திறமையான ஆசிரியராகவும் விழங்கும் திருமதி செல்வரத்தினம் சுப்பிரமணிய அவர்கள் மனையாக வந்தமை இவரது நற்ப்பேறே ஆகும். அவரின் முயற்ச்சியை வாழ்த்துகின்ற யாவரும் அவரது பாரியாரையும் வாழ்த்தக்கடமைப்பட்டவர்கள்.