குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

கல்விக்கு எங்கள் கிராம மக்கள் கொடுத்த விலை மிக அளப்பரியது. தமது குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் தம் நேரம் காலம் பொருளாதாரம் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார்கள்.இதற்கு அடையாளமாக எங்கள் மண்ணில் அரசாங்க சேவையில் இருந்தவர்களில் அரைப்பங்குக்கு மேலானவர்கள் ஆசிரியர்களாவர்கள்.

 

ஆசிரிய சேவையில் இணைந்து முழுமனதுடன் சேவையாற்றி எம்மவர் கல்வியில் உயர வழிசமைத்தவர்கள் பலர். தமிழில் பாண்டித்தியம் பெற்று திறமை பெற்ற தமிழ் பண்டிதராக திகழ்ந்தவர் பண்டிதர் வ. நடராஜா அவர்கள். 
 
இவர் நாம் அறிந்தவரை ஒய்வு பெற்ற ஆசிரியராகவே கண்டிருக்கின்றோம். தமிழுடன் கணிதத்திலும் திறமை பெற்றவராகத் திகழ்ந்த இவரிடம் பலர் பாடங்கற்று உயர்நிலையில் இருக்கிறார்கள். கற்கை நெறிக்கு பல நூல்களை எழுதிய இவரின் ஆற்றல் பாடநூல்கள் வெளியிட்டகம் வரை இவருக்கு பாதை அமைத்தது. 
 
எங்கள் கிராம வளர்சிக்காக கிராம முன்னேற்ற சங்கங்களில் பல பதவிகளை வகித்தவர், ஆற்றல் மிகுந்த பேச்சாளர் ஆவர். கல்வி கற்பிப்பதில் தன்கிருந்த ஆர்வத்தை ஒய்வு பெற்ற பின்பும் தொடர்ந்தார். எம்மவருக்கு கணிதத்திலும் தமிழிலும் திறமை பெற தன் பணிசெய்தவர். எங்கள் ஊரில் பண்டிதர் என்ற சொல்லுக்குரியவராக என்றும் மதிக்கப்பட்வருமாவர்.