குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

பாலகர்கள் மழைநீரில் நனைந்தபடி மலர்கொத்தை தாங்கி நிற்க,  பாலாலி வீதி எங்கும் எம்மவர்கள் (வேதனையை சுமந்தபடி) அணி நடக்க, எங்கள் ஊரின் காவிய நாயகனுக்கு விடை கொடுத்த வியாழனன்று உலகமே அறிந்தது நாம் யார் என்று. ஊரை விட்டு இடம் பெயர்ந்து எம்மவர்கள் வாழ்ததனால், உரும்பிராய்க்கிராமும் எம்மவரால் பெற்றது பெருமை இன்று.

ஆம், இது வரை எந்தக் குரும்பசிட்டியருக்கும் நடைபெறாத இறுதி அஞ்சலியையும், மரண ஊர்வலத்தையும் தனாதாக்கிக்கொண்ட எங்கள் ஊரின் மைந்தன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள் தனக்கென எடுத்துக் கொண்டது இவ் இரண்டையும் தான்;.

 

உடல், உழைப்பு அனைத்தையும் எங்கள் மண்ணுக்கும், மக்களுக்கும் கொடுத்துவிட்டு ஆவிபிரிந்த பின் கூடுவார் ஊரர் என்பதற்கமைய பகைவரை பக்தனாக்கி, நண்பரை (கண்ணீரிலும், மழைநீரிலும்) நனைய வைத்து தன் ஊழியத்ததிற்கு ஒய்வெடுத்துவிட்டார் ஆசியரியப் பெருந்தகை அவர்கள்.

தனது கோரிக்கைகளை சுமந்து கொண்டு யார் யாரை எல்லாம் காணவென எங்கெல்லாம் அலைந்தாரோ, தன் மரணத்தின் பின அவர்கள் அனைவரையும்; தனது இல்லத்துக்கே அழைத்துவிட்டார் ஆசிரியர் அவர்கள். துணிச்சல் மிக்க செயல் வீரன் ஒருவருக்கு தங்கள் இறுதி மரியாதையைக் கொடுக்க அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலைமாணவர்கள், கல்விச் சமூகத்தைசேர்ந்தோர், பல்கலைக்கழக துணை வேந்தர், படைத்தளபதிகள் என ஓராயிரம் பேர் வந்து எங்கள் கிராமத்தினர் ஓருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். 

குரும்பசிட்டி என்று ஒரு கிராமம் இன்றும் உயிரோட்டமாக யாழ் மாவட்டத்தில் இருக்கின்றது என்பதை உலகிற்கு புடம் போட்டுக்காட்டிய நாயகன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள், அவநம்பிக்கை என்னும் சொல்லை தன் அகராதியில் கொண்டிராதவர். முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதராணமாக வாழ்ந்தவர். இவருடைய செயலை விமர்சிப்;பவர்கள் பின்னர் தாங்களாகவே தலைகுனிவார்கள், அவ்வளவிற்கு அயராத முயற்சியும், தளராத நம்பிக்கையும் கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றி பெற்ற வீரன்.
 
காரியம் சாதிக்க சுழ்நிலை அறிந்து காய்நகர்த்திப் பேசும் திறமையும், மறுத்தவரை மனமாற்றம் செய்யும் சமயோசிதப் புத்தியும் கொண்டு வெற்றி பெறும் வரை விடாமுயற்சியுடன்; தொழிற்படும் சுபாவமும் கொண்டு வாழந்தவர். இவர் போன்ற அபூர்வ பிறவிகள் எம்மைவிட்டு பிரிந்தாலும் மறையாத மனிதர்கள். தன்னைத்தாங்கி நின்ற தனது மண்ணிலேயே தன் உடல் வேக வேண்டும் என்ற வேட்கை கொண்டு வாழ்ந்த மனிதனின் ஆவலைப் புர்த்திசெய்ய முடியாத காரணத்தால் தான் என்னவோ. குரும்பசிட்டித் தாயவள் கானகமாய் போய் இருந்த தன்னை மீட்டெடுக்க பாடுபட்ட தன் தவப்புதல்வனுக்கு விடை கொடுக்க வீதியெல்லாம் குளமாக கொட்டி இறைத்தாள் மழையாக தன் கண்ணீரை. மனிதநேயம் கொண்ட மனிதன் ஒருவர் மறையும்போது வானமே கண்ணீர் வடிப்பது இயல்பு என்பதற்கு இதுவே சாட்சி.
 
கேட்பதற்கு யாருமில்லையென வாழ்ந்த ஊரவருக்கு துன்பம் நேரும்போதுதெல்லாம், அடுத்த கணமே ஆசிரியரின் பிரசன்னம் அங்கு இருக்கும். தங்கள் தேவைகளைக் தட்டிக்கேட்க ஒருவர் இருக்கின்றார் என்று நிம்மதியாக வாழ்ந்த எம்மவருக்கு ஆசிரியர் அவர்களின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளது. வீட்டை, உறவை ஒதுக்கி ஊரின் மீட்பே தன் கனாவாக வாழ்ந்துகாட்டிய ஆசிரியர் சி. நடராஜா அவர்களின் கனவும் அவரது விருப்பங்களும் நிறைவேற அவரின் பாதையில் பயணிக்கும் எம்மவார்களின் பணிக்கு அனைவரும் ஒத்தாசையாக இருந்து ஆசிரியர் சி. நடராஜா அவர்களின் எண்ணக்கiவை நனவாக்குவதே அந்த சமுகசேவையாளருக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும். 
 
 மற்றவர்க்காக வாழ்ந்தவர்கள் மறைவதே இல்லை தங்கள் பணியைத் தொடர மீண்டும் எங்கள் மண்ணில் அவதரிப்பார்கள். 


 
 ஆக்கம் - புலந்திரன் மகேசன்